யூடியூபில், 'ஹோம்-டூர்' வீடியோ பார்த்து திருட வந்த ஆசாமி.. மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த 'யூடியூபர்'
கோயம்புத்தூரில், ஹோம் டூர் வீடியோ பதிவேற்றிய youtuber-ன் வீட்டை கண்டுபிடித்து, புதுச்சேரியிலிருந்து வந்த திருடனை அந்த youtuber மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
யூடியூப் காணொலிகள் மூலம் பிரபலமான சுஹைல் - பாபினா தம்பதியர், கே.ஜி சாவடியில் தாங்கள் புதிதாக கட்டிய வீட்டிற்கு 4 மாதங்களுக்கு முன் குடிவந்தனர். காலை 6 மணியளவில், அவர்கள் வீட்டிற்கு வந்த நபர், வெளியே விளையாடிய சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டு கதவை தட்டவைத்துள்ளான்.
சுஹைல் வந்து கதவை திறந்ததும் உள்ளே புகுந்த ஆசாமி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். சுஹைலும், அவரது உறவுக்கார சிறுவனும் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவன் புதுச்சேரியை சேர்ந்த அனுராம் என்பதும், சுஹைல் யூடியூப்பில் பதிவேற்றிய ஹோம் டூர் காணொலி மூலம் அவரது வீட்டை கண்டுபிடித்து வந்து, யூடியூப்பில் சுஹைல் ஈட்டிய வருவாயை திருடி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
Comments