இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது அதிநவீன 'வகிர்' நீர்மூழ்கி கப்பல்..!

0 2117

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஐஎன்எஸ் 'வகிர்' நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் வகிர் கப்பல் இணைக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மசகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ஐஎன்எஸ் 'வகிர்' உருவாக்கப்பட்டது.

இந்த நீர்மூழ்கி கப்பல், எதிரிகளைத் தடுப்பதிலும், கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளிலும் இந்திய கடற்படையின் ஆற்றலை வலுப்படுத்தும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் சிறந்த சென்சார்களை கொண்ட அந்த நீர்முழ்கியால், பெரியளவிலான எதிரி படையை நிர்மூலமாக்கும் வகையில், நீர்பரப்பில் இருந்து நிலத்திற்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீசல் - மின்சாரத்தில் இயங்கும் அந்த நீர்மூழ்கி கப்பலால், கடல் பகுதி மட்டுமின்றி வான் பகுதி, நிலப்பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முடியும். பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும் கல்வாரி ரக நீர்மூழ்கியின் 5வது கப்பல், ஐஎன்எஸ் 'வகிர்' ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments