நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி, 21 தீவுகளுக்கும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர்

0 1747

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை பராக்ரம திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வரும் நிலையில், அந்தமான் நிகோபார் தீவில் உள்ள 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டினார்.

காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, அந்தமானில் தான் இந்தியாவின் முதல் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதோடு, சுதந்திர இந்தியாவின் முதல் அரசும் இங்கு தான் ஏற்படுத்தப்பட்டது என்றார்.

வீரசாவர்கர் போன்ற எண்ணற்ற ஹீரோக்கள் அந்தமான் சிறையில் தான் அடைக்கப்பட்டனர். தீவுகளுக்கு விருது பெற்றவர்களின் பெயர் சூட்டுவதன் மூலமாக அவர்களின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments