அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்?...
தமிழ்நாட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய கேட்பு விபரங்களை, நிதித்துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
IFHRMS என்ற டிஜிட்டல் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் பணி நாட்கள், விடுப்பு உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே கருவூலத்தில் இருந்து சம்பளம் விடுவிக்கப்படும். ஜனவரி மாதமும் ஆன்லைன் தளத்தில் பதிவிட தொடங்கிய நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திடீரென தளத்தில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments