மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
தமிழ் என்பது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட மொழி - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ் மொழி என்பது மற்ற மொழிகளில் இருந்து வந்தது அல்ல, தமிழ் என்பது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட மொழி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அருணை தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தது திமுக அரசுதான் என்றும், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஆணையிட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் கூறினார்.
மேலும் தமிழுக்காக தாம் இயற்றிய பாடல் வரிகளை ஓர் ஆயிரம் நிலவே வா என்ற மெட்டின் மூலம் அமைச்சர் எ.வ.வேலு பாடினார்.
Comments