இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று இணைப்பு!

0 1795

ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களும், 17 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை.

கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2007-ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.

முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி, 2021-ம்ஆண்டில் ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5-வதுநீர்மூழ்கியான ஐஎன்எஸ் வகிர் இன்று கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments