நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நடந்து ரோந்து செல்வது போன்ற பாரம்பரிய கண்காணிப்பை காவல்துறையினர் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி கொள்ள ஏதுவாக காவல்துறையினரும் புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் மாநாட்டில், சிறை சீர்திருத்தம், சிறை நிர்வாகத்தை மேம்படுத்துதல், காலாவதியான கிரிமினல் சட்டங்களை நீக்குதல், கடலோர பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் பேசினார்.
Comments