அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், லைவ் ஸ்ட்ரீமிங்கின் நன்மையை சுட்டிக் காட்டினார்.
மொழிரீதியான தகவல் தடையை அகற்றுவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
சந்திரசூட் தலைமை நீதிபதியான பின், உச்சநீதிமன்ற விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments