பெருங்குடியில் சதுப்பு நிலம் பெரிதும் பாதிக்கப்படுவதால் குப்பைக் கிடங்கை அகற்ற கோரிக்கை போராட்டம்..!
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கை அகற்றி, சதுப்பு நிலத்தை பாதுகாக்கக்கோரி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை சுங்கச்சாவடி அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பெருங்குடி குப்பை கிடங்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், 50 ஆண்டுகளாக இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், பறவைகள் வசிப்பிடமாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Comments