ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

0 1834

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசூர் ஏர் நிறுவனத்தின் AZV2463 விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவாவிற்கு புறப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நள்ளிரவு 12.30 மணிக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.

இதனையடுத்து, இந்திய வான்வெளிக்குள் விமானம் நுழைவதற்கு முன்பு இன்று அதிகாலை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments