தை அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

0 3292

தை அமாவாசையை முன்னிட்டு, சென்னை முதல் குமரி வரை உள்ள நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட நெரிசல் ஏற்பட்டது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி ஓடத்துறை காவிரி ஆற்றங்கரை, பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரை, தென்காசி குற்றாலம் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதே போல, மூன்று நதிகள் சங்கமிக்கும் ஈரோடு பவானி கூடுதுறையிலும் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

புதுச்சேரியில் தை அமாவாசையை முன்னிட்டு, முக்கிய கோவில்களில் உள்ள உற்சவர்கள் கடற்கரை சாலைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments