ஐநா.சபை குழுவினர் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை... பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைத் திரும்ப வழங்கும்படி கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி,வேலை மற்றும் கலாசார உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று தாலிபன் தலைவர்களுடன் ஐநா.சபை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐநா.துணைப் பொதுச் செயலாளர் அமீனா முகமது தலைமையிலான குழு ஒன்று காபூலுக்குச் சென்றுள்ளது.அக்குழுவினர் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்கள் பேச்சுவார்த்தை மூலம் பெண்களுக்கு எதிராக உள்ள சில தடைகள் நீக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர்.
Comments