உத்தரகாண்டில் பூமியில் புதைந்த இரண்டு பெரிய ஓட்டல்களை இடித்துத் தள்ளிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள்!
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை நகரான ஜோஷிமத்தில் பல நூறு கட்டடங்கள் மண்ணில் புதைந்து வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற கட்டடங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பூமியில் புதைந்த ஓட்டல் மலாரியை இடித்துத் தள்ளிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அருகில் இருந்த மவுண்ட வியூ என்ற மற்றொரு விடுதியையும் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இதனைத் தொடர்ந்து மூன்று வீடுகளை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தற்போது பனிப்பொழிவு அதிகளவில் இருப்பதால், கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Comments