மைக்ரோசாப்ட், அமேசானை தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸான் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் அதன் மொத்த பணியாளர்களில், செயல்திறன் சரியில்லாத 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதிய திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாக இதற்கு முழுப்பொறுப்பேற்பதாகவும் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
Comments