எல ஜெயபாலு எனக்கு இவா பால் ஊத்திருவா போல இருக்கேலெ.. கார் பேனட்டில் தர்சன் ஊசல்..! பிரியங்கா இப்படி செய்யலாமா ?
பெங்களூரில் காரில் மோதியதை தட்டிக்கேட்ட உரிமையாளரை , தனது கார் பேனட்டில் தொங்கவிட்டபடி பெண் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெங்களூரு, ஞானபாரதி காவல் நிலையம் அருகே தர்ஷன் என்பவர் நண்பர்களுடன் ஓட்டி வந்த சுசுகி ஸ்விப்ட் கார் மீது பிரியங்கா என்ற பெண் ஓட்டிவந்த டாடா நெக்சான் கார் மோதியது.
தனது கார் நசுங்கியதால் காரில் இருந்து இறங்கிய தர்சன் அந்தப்பெண்ணிடம் நியாயம் கேட்டார்.
அந்தப்பெண் காரை கிளப்புவதில் குறியாக இருந்ததால் அதனை மறித்து நின்றார். அப்போது அந்த பெண் காரை வேகத்துடன் கிளப்ப, தர்சன் காரின் முன்பக்க பேணட்டின் மீது பாய்ந்தார்.
அவர் காரின் பேனட்டில் தாவி படுத்த நிலையில் கார் வேகமாக புறப்பட்டது.
தர்சனின் நண்பர்கள் இருசக்கரவாகனத்தில் பெண்ணின் காரை மறித்து நிறுத்துவதற்காக விரட்டிச்சென்றனர்
பிரியங்கா ஓட்டிச்சென்ற கார் வேகத்தடையை எல்லாம் அசால்டாக கடந்து செல்ல காரின் பேனட்டில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தர்சன் படுத்திருந்தார்
காரை எப்படியும் நிறுத்திவிடலாம் என்று இரு சக்கரவாகனத்தில் சென்றவர்ள் காரை பின் தொடர்ந்தனர்.
ஆனால் அந்தப்பெண் எங்கும் நிற்காமல் அதிவேகத்தில் சென்றதால் அவர்களால் எட்டிப்பிடிக்க முடியவில்லை
ஒரு கட்டத்தில் அந்தப்பெண் ஓட்டிச்சென்ற காரின் கண்ணாடியை அடித்து உடைத்ததால் காரை அந்தப்பெண் நிறுத்தியதாக கூறப்படுகின்றது.
பின்னர் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
விபத்து ஏற்படுத்தி விட்டு , மற்றொரு காரின் உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றதோடு அவரை பேனட்டில் தொங்கவைத்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் அந்தப்பெண்ணின் காரை அடித்து சேதப்படுத்தியதோடு, அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக தர்சன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த வாரம் பெங்களூருவில் முதியவர் ஒருவரை இளைஞர் இரு சக்கரவாகனத்தில் இழுத்துச்சென்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பெண் ஒருவர் இந்த சம்பவத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.
Comments