மேட்டுப்பாளையம் தனியார் பள்ளியில் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்திய -ரஷ்ய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஷ்ய நாட்டின் கலாச்சாரம், நடனம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக இந்திய -ரஷ்ய கலாச்சார குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலாச்சார நடனங்களை ஆடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்ய கலைஞர்கள் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடியது மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் இம்மாதம் இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக இந்திய -ரஷ்ய கலாச்சார தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்துள்ளார்.
Comments