சட்ட அமைச்சகம் நிராகரித்த 2 நீதிபதிகள்- மீண்டும் பரிந்துரை செய்தது கொலிஜீயம்

0 1542

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், மத்திய சட்ட அமைச்சகம் நிராகரித்த இரண்டு பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மீண்டும் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமித்தேஷ் பானர்ஜி, சாக்யா சென் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களின் பெயர்களை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அவை நிராகரிக்கப்பட்டதையடுத்து மீண்டும் பரிந்துரை செய்து திருப்பி அனுப்பி வைத்தது கொலிஜீயம் அமைப்பு.

இது தவிர சென்னை, கர்நாடகா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றங்களுக்கு 17 வழக்கறிஞர்கள், 3 நீதித்துறை அதிகாரிகளை நீதிபதிகளாக நியமிக்கவும் கொலிஜீயம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments