சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் சம்பட்டியால் அடித்து கொலை

0 1476

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ராஜபாண்டியன். இந்த நிலையில் பாண்டியனின் சகோதரி அய்யம்மாளுக்கும் பாண்டியனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல்  தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர் களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்.பின்னர் தனியாக இருந்த ராஜபாண்டியை சம்பட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments