''நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை..'' - அமைச்சர் கிரண் ரிஜிஜூ..!

0 1521

நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சுமூக உறவு உள்ளதாகவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கிரண்ரிஜிஜூ, கொலிஜியத்தில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளதாக கூறினார்.

மேலும், நீதி விரைந்து கிடைக்க வேண்டுமெனில், நீதிமன்றங்கள் நவீனமாக இருப்பது அவசியம் என்பதால் அனைத்து நீதிமன்றங்களிலும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.

நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments