கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை..!
காவல் நிலையத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள், குறிப்பாக பெண்களின் புகார் மனுக்களை மனித நேயத்துடன் அணுகி பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர், உள்துறைச்செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
போக்சோ, கொலை, கொள்ளை உள்ளிட்ட முக்கிய குற்றவழக்குகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அவர், மாவட்டங்களில் நடைபெற வாய்ப்புள்ள குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
Comments