துப்பாக்கியுடன் அரசு வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையர்களை தடுத்து நிறுத்திய பெண் காவலர்கள்..!
பீகாரில், அரசு கிராம வங்கியை கொள்ளையடிக்க முயன்ற மூன்று கொள்ளையர்களை, பெண் காவலர்கள் இருவர் துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய நிலையில், தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹிஜாபூரின் செந்துவாரி பகுதியில் அமைந்துள்ள உத்தர் பிகார் கிராம வங்கிக்குள 3 பேர் நுழைந்த போது, அவர்களின் வங்கி பாஸ்புக்கை, காவலுக்கு இருந்த பெண் காவலர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது, கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியை காட்டியதையடுத்து, இருவரும் ஒரு நொடி கூட தயங்காமல், துப்பாக்கியுடன் எழுந்து கொள்ளையர்களுக்கு சவால் விடுத்தனர். இந்த போராட்டத்தில், பெண் காவலர் காயமடைந்த நிலையில், கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடினர்.
Comments