நீலகிரியில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு: அவலாஞ்சியில் -4°C வெப்பநிலை பதிவு

0 1500

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸாக குறைந்ததால் கடுங்குளிர் நிலவியது.

உதகையில் 1.6 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும் வெப்பநிலை பதிவானதால் விளைநிலங்கள், புல்வெளிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.

இதே போல, கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைந்து கடும் உறைபனி நிலவியது. செடிகள், புல்வெளிகளில் பனிபடர்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments