எருது விடும் விழாவில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. கல்வீசி கலவரத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது!

0 2097

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலியானதாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டதாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்நார்சாம்பட்டியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே எருது விடும் விழா நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விழா நடத்தப்பட்டதால், லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

அப்போது, சீறிபாய்ந்த எருது ஒன்று, முஷாரப் என்ற இளைஞரை முட்டியதில் காயமடைந்து கீழே விழுந்தார். போலீசார் தாக்கியதால் இறந்து விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments