ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் பனி காரணமாக 70 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் 70 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாகவே காபூல் உள்ளிட்ட இதர மாகாணங்களில் வெப்ப நிலை சரிந்து, கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 33 டிகிரியாக சரிந்தது.
இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் குளிர்ச்சியானது என்று ஆப்கான் வானிலை மையம் தெரிவித்தது. இந்த குளிர் அலை மேலும் ஒருவாரம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குளிருக்கு கடந்த 8 நாட்களில் 70 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துவிட்டன.
Comments