கால்பந்து போட்டியின் நேரலையில் திடீர் என ஒலித்த அநாகரிக சப்தங்கள்.. தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிபிசி நிறுவனம்!
இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் நேரலையின்போது திடீர் என அநாகரிக சப்தங்கள் ஒலித்ததற்காக பிபிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
லண்டனில் உள்ள மொலினக்ஸ் மைதானத்தில் வால்வர்ஹாம்ப்டன் மற்றும் லிவர்பூல் இடையேயான போட்டி நேரலை ஒளிபரப்பின் போது அருவருப்பான சத்தங்கள் ஒலித்துள்ளன.
அப்போது போட்டியை சக நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்த, போட்டி வர்ணனையாளரும் முன்னாள் கால்பந்து வீரருமான லினேகர் சிரிப்பில் ஆழ்ந்தார், இதற்கிடையில், ஜார்வோ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் யூடியூப் குறும்புக்காரரான டேனியல் ஜார்விஸ், தாம் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி மொலினக்ஸ் ஸ்டேடியத்தில் இருப்பதாகத் தோன்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிபிசி நிறுவன செய்தி தொடர்பாளர் நேரலையில் நேர்ந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார்.
Comments