நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் தர மறுப்பு
நிதிநெருக்கடியில் தள்ளாடும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடனுதவி வழங்குவதை ஒத்தி வைத்துள்ளது.
சுமார் ஒருபில்லியன் டாலர் கடன்தொகையை வழங்க முன்வந்த உலக வங்கி பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகளால் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தனது பொருளாதார நிலையில் இருந்து மீள்வதற்காக இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் அழைப்புவிடுத்துள்ளது.
ஆனால் தீவிரவாதத்தை முற்றிலும் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் எந்தவித உறவையும் தொடங்க முடியாது என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments