ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

0 1575

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அத்தொகுதியுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 சட்டப்பேரவை மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் 31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments