மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 11000 ஊழியர்களை இன்று பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை இன்று பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த அக்டோபர் மாதம் ஆட்குறைப்பில் ஈடுபட்டநிலையில், இன்று அதன் பணியாளர்களில் 5 சதவீதம் அல்லது 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணிநீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து வேலைகளை இழக்கக்கூடும் அபாயம் எழுந்துள்ளது.
Comments