சர்வதேச தீவிரவாதியும், மும்பை நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவது உறுதி!

0 3497

சர்வதேச தீவிரவாதியும், மும்பை நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக அவனது உறவினர் தெரிவித்துள்ளார்.

தாவூத்தின் மறைந்த சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன் அலிஷா இப்ராஹிமிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியபோது இந்த விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தப்பியோடிய தாவூத் இப்ராகிம் கராச்சியில் அப்துல்லா காசி பாபா தர்கா அருகே வசித்து வருவதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அலிஷா கூறியுள்ளார்.

அலிஷாவிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் என்ஐஏ விசாரணை நடத்தியது. அதன் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments