பைக்கிற்கு பெட்ரோல் தர மறுத்ததால் ஆத்திரம்.. இரு தரப்பினர் இடையே கடும் மோதல் - கடைகள் உடைப்பு!

0 2192

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெட்ரோல் தர மறுத்ததால் ஏற்பட்ட மோதலில் இரு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் நண்பருடன் தனது பைக்கிற்கு பெட்ரோல் வாங்க புள்ளாநாயக்கன் பட்டியில் உள்ள ரவி என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாங்கள் பெட்ரோல் விற்கவில்லை என ரவியின் மகள் கூறியதை அடுத்து இருதரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்திரன் தரப்பைச் சேர்ந்த சுமார் 50 பேர் கடைகளை அடித்து நொறுக்கினர்.

இதுதொடர்பாக 15 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments