சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை - தேசிய புள்ளியல் துறை

0 1717

சீனாவின் தேசிய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1961ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது, 2021ம் ஆண்டில் இருந்ததை விட 2022ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், மக்களிடம் அதிகரித்துள்ள கல்வியறிவால் "ஒரு குழந்தை" என்ற திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

தற்போது, சீனாவில் 141 கோடியே 17 லட்சம் மக்கள் உள்ள நிலையில், இந்தியா 2022ம் ஆண்டிலேயே 141 கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் என்பதால் 2022ம் ஆண்டிற்கான புள்ளி விபரம் கிடைக்கவில்லையென ஐநா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments