உலகின் மிகப்பெரிய நதி சொகுசு கப்பல் பயணத்தை துவங்கிய 3-வது நாளிலேயே கங்கை நதியில் தரை தட்டியது..!
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பயணத்தை துவங்கிய உலகின் மிகப்பெரிய நதிக்கப்பலான கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பீகாரின் சரன் மாவட்டம் டோரிகஞ்ச் பகுதிக்கு அருகில் கங்கை நதியில் தரை தட்டி நின்றது.
50 பயணிகளுடன் கடந்த 13ம் தேதி பயணத்தை துவங்கிய இக்கப்பல் 3வது நாளில் பீகாரின் தொல்லியல் தளமான சிராந்த் நோக்கிச் சென்ற போது சப்ரா கங்கையில் ஆழமற்ற பகுதியில் போதிய நீர் இல்லாத காரணத்தால் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கப்பலில் இருந்த பயணிகள் அனைவரையும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு சிராந்த் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.
Comments