சூப்பர் ஸ்டார் சர்ச்சை காண்ட்ராக்டர் நேசமணி போல காண்டான சரத்குமார்..! திரும்ப திரும்ப பேசற நீ..

0 9292

வாரிசு படவிழாவில் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்தாலும் புகழ்ந்தார், செல்லுமிடமெல்லாம் அது தொடர்பான சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் டென்சனாகும் சரத்குமார், தனக்கு தனது தந்தை தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.. 

வாரிசு படம் வெளியான 5 வது நாளில் படம் வெற்றி பெற்று விட்டதாக கூறி நடத்தப்பட்ட சக்சஸ் மீட்டில் பங்கேற்று விட்டு வெளியே வந்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் விஜய்யை புகழ்ந்தது குறித்து கேள்வி எழுப்ப பட்டதும் , பிரண்டஸ் படத்தின் வரும் காண்ட்ராக்டர் நேசமணி போல காண்டானார் சரத்குமார், எனது மகனுக்கு நான் சூப்பர் ஸ்டார், எனக்கு எனது தந்தை சூப்பர் ஸ்டார் போதுமா ? அடுத்த முதல் அமைச்சரவான்னு சொல்லல.. அடுத்த பிரைம் மினிஸ்டர் ஆவானுன்னு சொல்லல இதனை பிரச்சனையக்காதீங்க என்றார்.

ஐ எம் சுப்ரீம் ஸ்டார்...! சூப்பர் பெருசா, சூப்ரீம் பெருசா, மெகா ஸ்டார் பெருசா, அல்டிமேட் ஸ்டார் பெருசா என்று கூறிய சரத்குமாரிடம் சுப்ரீம் ஸ்டார் என்று இன்னொரு நடிகருக்கு பட்டம் கொடுத்தால் என்ன ? என்று கேட்டதும், ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றார்.

விஜய்க்கு இளையதளபதி என்ற பட்டம் இருக்கும் போது, ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தது ஏன் ? என்று மீண்டும் கேட்டதால் இன்னும் உக்கிரமான சரத்குமார் , பட்டத்தைதான் பார்க்கிறீர்களா மனிதனை பார்ப்பதில்லை என்றார்.

சினிமாவில் நம்பர் ஒன் நம்பர் டூ என்று சொல்வது எல்லாம் கேம் என்றும், எந்த காலத்தில் யாரை மக்கள் அதிகமாக விரும்புகிறார்களோ ? அவரே நம்பர் 1, சூப்பர் ஸ்டார் என்று கூறி சமாளித்த சரத்குமாரிடம் அப்படி என்றால் இப்போது ரஜினியை விரும்பும் மக்கள் குறைந்து விட்டார்களா ? என்று கேட்டதால் நான் அப்படி சொல்லவில்லை என்றார்.

சுற்றி சுற்றி கேட்கப்பட்ட கேள்விகளால் திணறிப்போன சரத்குமார். 24 ந்தேதி ஒரு பிரஸ் மீட் வைத்து இந்த பிரச்சனை குறித்து விரிவாக பேசுவதாக தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments