கடும் தட்டுப்பாட்டால் கோதுமை மாவு லாரியை பைக்குகளில் விரட்டிய பாகிஸ்தானியர்கள்..!
பாகிஸ்தானில் கோதுமை மாவு மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால், அதை வாங்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் பைக்குகளில் ஏராளமானோர் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கோதுமை மற்றும் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் கோதுமை மாவு மூட்டைகளை ஏந்திய சரக்கு லாரியை பைக்கில் பலர் துரத்திச் செல்வதையும் சிலர் உயிரைப் பணயம் வைத்து லாரியில் பாய்ந்து ஏறி கோதுமை மூட்டையை அபகரித்து செல்லும் காட்சியும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
15 கிலோ கோதுமை மாவு மூட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இரண்டே வாரத்தில் இதன் விலை கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்துள்ளது.மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவுப் பொருட்களை வழங்க முடியாமல் பாகிஸ்தான் அரசு திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.
Comments