காஷ்மீரில் சுரங்கப்பாதை பணியின்போது பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!
காஷ்மீரில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்போது நேரிட்ட பனிச்சரிவால், சுரங்கத்தில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது.
கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிலா சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்படவே, 172 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் ராணுவ வீரர்கள் விரைந்து வந்து 172 தொழிலாளர்களையும் மீட்டனர்.
Comments