சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 59,938 பேர் உயிரிழப்பு..!
சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 12-ம் தேதி வரை 59 ஆயிரத்து 938 பேர் கொரோனா பாதிப்பு தொடர்பாக உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரி ஜியாவோ யாஹுய் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட இறப்புகள் மட்டுமே என்றும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Comments