அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது திடீரென நின்றதால் விபத்து..!

0 2484

அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது  சாலையில் திடீரென நின்றதால் பின்னால் வந்த 8 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவியில் பதிவான புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 76 வயதான வழக்கறிஞர் டெஸ்லா S மாடல் காரில் பே பிரிட்ஜின் அடியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நின்றதால் பின்னால் வந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 2 வயது குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது கார் திடீரென பிரேக் பிடித்ததாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments