"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
லிதுவேனியா - லாட்வியா எரிவாயுக் குழாய் வெடித்து தீ விபத்து
லிதுவேனியாவில் இருந்து லாட்வியா நாட்டுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பர் கிரிட் என்ற நிறுவனம், லிதுவேனியாவில் இருந்து லாட்வியாவுக்கு, 2 குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகித்து வருகிறது. இந்நிலையில், பனேவெஸிஸ் பகுதியில் ஒரு குழாய் வெடித்து, சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்ட நிலையில், தீ விபத்து ஏற்படாத மற்றொரு குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிப்பதாக ஆம்கர் கிரிட் நிறுவன தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், எரிவாயுக் குழாய்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments