கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு எலும்பு முறிவு

0 3669

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேரும் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க தப்பிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் 3 பேருக்கு காலிலும், 2 பேருக்கு கையிலும் முறிவு ஏற்பட்டது.

செவிலிமேடு அடுத்துள்ள குண்டுகுளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கல்லூரியில் பயிலும் காதலர்கள் 2 பேர் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த இளைஞர்கள், காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் மற்றும் வாகனத்தை பறித்துள்ளனர்.

அத்துடன் காதலன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம்பெண்ணை அவர்கள் மாறி மாறி கூட்டு வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறினால் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் நேற்று மணிகண்டன், விமல், தென்னரசு, சிவகுமார் ஆகிய 4 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று விக்னேஷ் என்ற மேலும் ஒருவனை போலீசார் கைதுசெய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments