பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்

0 2050

பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சங்தோக் சிங் சவுதரி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஃபில்லாவூரில் இன்று காலை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றிருந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தார்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

76 வயதான சவுதரி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments