சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கு பூஜை... ஜோதியைக் காண ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

0 2687

சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜையையொட்டி மகரஜோதியைக் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர்.

மகர விளக்கு பூஜையின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

இன்று மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை வந்தடைந்ததும், ஐயப்ப விக்ரகத்திற்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும்.

அப்போது பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இதனைக் காண தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments