போன்கள் முதல் ஏவுகணைத் தயாரிப்புவரை.. 10 லட்சம் டன் அளவிலான அரியவகை உலோகக்கூறுகள் சுவீடனில் கண்டுபிடிப்பு
மின்சார வாகனங்கள்,ஸ்மார்ட்போன்கள் முதல் இலக்கை நோக்கித் தாக்கும் அதிநவீன ஏவுகணைத் தயாரிப்புவரை பயன்படுத்தப்படும் சுமார் 10 லட்சம் டன் அளவிலான அரியவகை உலோகக்கூறுகள் சுவீடன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து சுமார் 1000 km தொலைவில் , அந்நாட்டின் அரசு சுரங்க நிறுவனமான LKAB யால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த உலோகக்கூறுகள் தான் ஐரோப்பாவின் தற்போதைய மிகப்பெரிய இருப்பாகும்.
இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் முறையான சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்று இவை சந்தைக்கு வர 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும் என LKAB சுரங்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் மோஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் 98 சதவீத உலோகக்கூறுகள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments