தமிழ் மொழித்தாள் தேர்வு கட்டாயம்... தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா நிறைவேற்றம்..!
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தில், அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு கட்டாயம் என்ற திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையிலும், கடந்த 2021 டிசம்பரில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் என வெளியிடப்பட்ட அரசாணையை செயல்படுத்தம் விதமாகவும், சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
அதன்படி, தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் இருந்தால், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள், அவர்கள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என திருத்தம் கொண்டு வரப்பட்டது.
Comments