ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிப்ரவரி முதல் வாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து இந்த விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு வழக்குரைஞர் கூறியதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Comments