நாளை முதல் டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
நாளை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி வரை குறையக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெதர்மேன் நவ்தீப் தாஹியா என்பவர் விடுத்துள்ள அறிக்கையில், நாளை முதல் 19ம் தேதி வரை கடுமையான குளிர் நிலவ வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
16ம் தேதி முதல் 19ம் தேதி வரை குளிர் உச்சத்தில் இருக்கும் எனவும், இந்த நிலைமை 2023ம் ஆண்டிலேயே அதிகபட்சமாக அல்லது 21ம் நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு குளிராக இருக்கும் என்றும் நவ்தீப் தெரிவித்துள்ளார்.
Comments