'யார் ரூட் பெரியது..?' - "ரூட் தல" விவகாரத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்கள், கட்டைகளால் தாக்கிக்கொண்டு மோதல்..!

0 2056
'யார் ரூட் பெரியது..?' - "ரூட் தல" விவகாரத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்கள், கட்டைகளால் தாக்கிக்கொண்டு மோதல்..!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், யார் ரூட் பெரியது? என மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில், மோதல் வெடித்தது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், பேருந்தில் சாகசங்களில் ஈடுபட்டும், ஊர்வலமாக சென்றும், பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்த போது, திருத்தணி ரூட் மாணவர்கள் கோஷமிட்ட நிலையில், பூந்தமல்லி ரூட் மாணவர்களும் கோஷமிட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு குழுக்களும், கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments