கொரோனா கால செவிலியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1451

பணி நிரந்தரம் கோரி, சென்னை எழும்பூரிலிருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற, கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேரை, ராஜரத்தினம் மைதானம் அருகே தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை துவக்கி வைத்தபின் பேட்டியளித்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள், மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் வழங்கப்படும் பணியை ஏற்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments