ரஷ்யாவின் தாக்குதலில் கெர்சனில் உள்ள மகப்பேறு மருத்துவமனை சேதம்..!
ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக, ஆளுநர் யாரோஸ்லாவ் யானுஷெவிச் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் மருத்துவமனை கட்டடத்தில் சேதம் ஏற்பட்டதாகவும், எனினும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே உக்ரைனின் கிழக்கு நகரமான சோலேடாரில் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும், ரஷ்யா தனது சொந்த மக்கள் ஆயிரக்கணக்கானோரை படுகொலைக்கு தள்ளுவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Comments