சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இராமேஸ்வரத்தில் இருந்தது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, தமிழ்நாடு மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை வலுப்பெறச்செய்யும் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அரபிக்கடலில் இருந்து வங்கக்கடலுக்கு செல்லும் கப்பல்கள் தற்போது இலங்கையை சுற்றி செல்லும் நிலையில், இந்தியா - இலங்கை இடையிலான பாக் ஜல சந்தி - மன்னார் வளைகுடா இடையே கடலை ஆழப்படுத்தி, பெரிய கப்பல்கள் போக்குவரத்திற்கு வழித்தடம் ஏற்படுத்தும் திட்டமே சேது சமுத்திர திட்டமாகும்.
Comments