அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!

0 1505

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த 71 வயதான ஜில் பைடன் மேரிலாந்தில் உள்ள தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வலது கண் மற்றும் மார்பக பகுதிகளில் இருந்த புற்றுநோய் கட்டிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

ஜில் பைடனுக்கு அறுவை சிகிச்சையை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் 8 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் இருந்துள்ளார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள ஜில் பைடன் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments